Showing posts with label 222 காதல் தோல்வி. Show all posts
Showing posts with label 222 காதல் தோல்வி. Show all posts

Friday, 20 April 2012

காதல் தோல்வி



தொடங்கிய கவிதை 
ஒன்று 
வார்த்தை 
இல்லாமல் நின்றது !,
எழுதிய பாடல்
ஒன்று இசை 
இல்லாமல் 
வெறும் எழுத்தானது !,
பலிக்காமல் போனது 
கனவொன்று !,
கையில் கிடைக்கும்
முன்னே 
கரைந்து விட்டது 
ஒரு பனிக்கட்டி !,
கூட்டமாய் காய்ந்தது 
கொத்தாக வாங்கிய 
மலர்கள் !.
நேற்று வரை 
ஈர்ப்பு விசையை 
பொய்யாக்கி
காற்றாய் பறந்த 
இடங்களில்
இன்று காலனி கூட 
பாரமாக தெறிகிறது !,
உன் பார்வையில்
தொடங்கிய 
என் வாழ்க்கை,
முடிந்துவிட்டது 
உன் வார்த்தையில்!…………………..
…………………………………..
இப்படி காலங்காலமாய் கவிதை 
எழுதியவர்கள் 
தான் எத்தனை பேர் !…
இறைவா இன்னுமா ஆண்களின் குரல் 
கேட்க்கவில்லை உனக்கு !…
ஆண் நெஞ்சை புரிந்து கொள்வதற்கு
பெண் அறிவை மாற்றி எழுதக்கூடாதா ?….

ஏழ்மை






ஏழ்மையின் அவலம்
இவர்களையும் விட வில்லை
உணவிற்கே பஞ்சம்
உலை ஏற்ற விறகுக்கும்
பஞ்சம்....

...இவள் மேல் இயற்கைக்கும்
கோபமா?????
அடிக்கடி வந்து போகும்
உறவினர் போல்
இவள் வீட்டை சுத்தப்படுத்தும்
வெள்ள நீர்...

சமையலறையுடன் இவளுக்கான
போராட்டம் ....

மாடி வீடு அறியாது .....

நீதி தேவதைகள் கண் திறக்கும்
வரை இவள் போராட்டம் தொடரும் ...

இனியவளே!





உயிருள்ளவரை
என்னால்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
காற்றை சுவாசிப்பது..!

உயிர்போனபின்பும்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
உன்னை நேசிப்பது....!!!

உன் நினைவுகள்...!!!




சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலும்
நிலவின் குளிர்ச்சியாய்
உன் நினைவுகள்..!

அரவற்று கிடக்கும் பாலைவனத்திலும்
நத்தவனத்தின் பசுமையாய்
உன் நினைவுகள்..!

கடுங்குளிர் காலை பயணத்திலும்
கதகதப்பாய்
உன் நினைவுகள்..!

அலுவலக தொலை பேசி சினுங்கல்களிலும்
என் கைபேசியின்
உன் குருந்செய்தியின் மணியாய்
உன் நினைவுகள்..!

காலை நேர பயணத்தில்
ஆட்டோக்களின் அலறலுக்கும்
பேருந்தின் இரைச்சல் சபத்ததிற்க்கும் இடையில்
பேரமைதியாய்
உன் நினைவுகள்..!

பெரும் சூறை காற்று வீசும்போதும்
தென்றலின் தொடுதலாய்
உன் நினைவுகள் ..!

அம்மு
உன் நினைவுகளே போதும்
என் இதயம் துடிக்க
என்றென்றும் உயிர்த்திருப்பேன்..!!!

திரும்பி வந்துவிடு என் singapore கணவா..!!




திரும்பி வந்துவிடு என் singapore கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு
மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய்
நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க
முயலும்போது குளிரடிப்பதாய் கூறி -
ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா 'அடி கள்ளி '
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...
என் singapore கணவா!
கணவா... - எல்லாமே கனவா....???

கணவனோடு இரண்டு மாதம்...
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
1 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌஇது வரமா ..? சாபமா..?

கண்களின் அழுகையை...
கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் singapore கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்துவாழலாம்

விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி...
காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி... காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும் நாம்
பரிமாறிக் கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு
நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு
அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு...
நீ தங்கம் தேடிளiபெயிழசந சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன...
பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம்
நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் singapore தேடுதலில்....
தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு -
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதேஇ
கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

திரும்பி வந்துவிடு என் singapore கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

-எனது விழியில் கண்ணீருடன்....
(உங்கள் அன்பு மனைவி)

('தாய்க்குப்பின் தாரம்' என்பார்கள். அப்படிபட்ட புனிதமான உறவான மனைவியை குடும்ப சூழ்நிலையின் காரணமாக பிரிந்து வாழும் அனைத்து வெளிநாட்டு நண்பர்களுக்கும் இந்த கடிதப் பதிவு ஒரு சமர்ப்பனம்)

முகத்தரிசனம்





முப்பது நாள் கழித்துதான்
எனக்கு உன் முழுமதி நிலவு
முகத்தரிசனம் கிடைக்குமென்கிறாய்..!

நிலவின்றி இரவிற்கேது வெளிச்சம்..?

நீயின்றி என் மனதிற்கேது வெளிச்சம்..?

விரைவில் என்னிடம் வந்து விடு...

என் விடியல் உனக்காக காத்திருக்கிறது..!

.

காதல் தோல்வி கவிதை




கொல்லாதே அன்பே 
விலகி விலகி சென்றாலும் 
விரட்டி விரட்டி அடிக்கும் 
உன் நினைவுகள். 
தூங்கும் போதும் 
என்னை தட்டி எழுப்பி 
செல்லுதே.. 
உன்னை பிரிந்து நான் 
தூரத்தில் இருந்தாலும். 
பிரியமான உன் 
மூச்சுக்காற்று என்னை 
சுற்றி சுற்றி வந்து 
சத்தம் இன்றி முத்தம் தந்து 
என்னை கொல்லுதே. 

உனோடு இருத்த நின்ய்வுகளை 
கடிகாரம் திரும்ப திரும்ப 
காடுகையில் 
பட பட என 
துடிக்கும் என் இதயம் 
என்றாவது நின்று போகலாம் ! 
நின்ற என் இதயம் கூட 
மாறாக முடிய வில்லை 
உன்யும் நீ விட்டு சென்ற 
என் காதல்யும் 

உன் கண்ணீர் துளி பட்டவுடன் 
மீண்டும் உயிர் பிறந்து துடிகும்மடி !

முடிக்கத்தெரியாமல் ஒரு கவிதை




ஆலங்கட்டி மழைபோல
அழுத்தமாய் வந்துவிழுந்த
உன் பார்வையில்
திக்குமுக்காடிப்போனது
மனது....

எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர..

நீ ஸ்பரிசம் தந்தாய்
நான் பரிசளித்தேன்...
எதற்காக என்று
இன்னும் விளங்கவில்லை...

எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிகாதாவைகள்
எது எதுவென இதுவரை
நான் கேட்டதில்லை...
நீ சொன்னதுமில்லை...

நீ பரிசாய் தந்த
ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய்..

நம்மை வெல்லத்துணிந்த
காதல் நிமிடங்களில்
நாமாயிருந்தோம்...

தடையில்லா காட்டாற்றைப் போல
வலிமறந்து, வழிமறைத்த
உன் காதல் பெருவெள்ளத்தில்
திளைத்த வேளைகளில்
மொத்தமாய்
தொலைந்துபோயிருந்தேன்
உனக்குள்...

இது எங்கே முடியுமென்று
தெரியாமல் சுழன்றோம்,
முடியாமல் இருக்க
முடிந்தவரை தொடந்தோம்..

அன்றும் அப்படி தான்
காலை சூரியன் மாலைக்குள்
ஒளிந்துகொண்டிருந்த நேரத்தில்,
என் கண்ணீரின் ஈரத்தை
உன் ஈரமுத்தம்
துடைத்தது வரை நினைவிருக்கு..

இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....

அவளிடம் அப்படி என்ன கேட்டுவிட்டேன்..!





வ்வொறு நிமிடமும்
வலிகள் கொண்டே நகர்கிறது
என் காதல் காலங்கள்...!

விரைவில் விடியாத 
சில ஊமை இரவுகளுக்கிடையே
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...

ரவோடு போரிட்டு 
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
 ஒருபோதும..!

வள் மீதான காதலை 
அதிகப்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்
 என் வலியின் வீரியங்களை இன்னும் 
வலுவடைய செய்கிறது...!

சொல்ல முடியாத என் காதலை
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!


லிகளைப்போக்கும் 
ஒரு சந்தர்ப்பத்திற்காக 
காத்திருக்கிறேன்
  
து என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!

உயிரை கிழித்து



உன்னை என் கருவாய்
சுமந்திருந்தேன் -நீயோ
குழந்தை போல் பிரிந்து விட்டாய்
என் உயிரை கிழித்து!


நெஞ்சமே.. நெஞ்சமே..



Love lost poem.

நெஞ்சமே.. நெஞ்சமே.. மெல்ல நீ தூங்கு..
துயரின்றி மெல்ல நீ தூங்கு.
விழிகள் சிந்தும் நீரில் உந்தன்
சோகம் தீர்ந்து போகுமா?
மேகம் உடைந்து போவதாலே
வானம் தரை தான் சாயுமா?'

காதல் செய்தால் பிழைகள் என்பர்
தனது காதல் மறைத்து தான்.
உண்மை காதல் பலதும் உண்டு
இன்னும் காதல் சிறையில் தான்.
நாகரிகம் கற்று தந்தும்
காதல் இன்னும் எதிரி தான்.
இருக்கும் ஜீவன் உனது என்றால்
காதல் பிழையே இல்லை தான்.
கனவு கண்டு வாழும் காதல்
கடலில் கரைத்த காயம் தான்.
நெஞ்சமே.. நெஞ்சமே.. மெல்ல நீ தூங்கு

இரக்கமில்லாத காதலிக்காக....



இரக்கமில்லாத
காதலிக்காக வேண்டி
காத்திருக்கும் ஆண்கள் எண்ணி
பார்த்து பொழுது போக்கத்தான்
நிலவும் நட்சத்திரமும்
கடவுளால்
படைக்கப்பட்டனவோ..?..?!

காதல் தோல்வி கவிதைகள்



வாழ்நாள் முழுவதும் என்னுடன் வாழ ஆசைப்பட்ட என்னவளே.......... 

என் வாழ்நாட்களை குறைப்பது ஏன்.........

பெரும்பாலான இன்றைய காதலின் எதிர் கால முடிவு- காதல் தோல்வி.

பெரும்பாலான இன்றைய காதலின் 
எதிர் கால முடிவு- காதல் தோல்வி.

காதல் ஒரு கட்டு மரம்- அதில் 
விழும் ஒரு ஓட்டையும்
படகை கவிழ்ப்பதை போல் தான் 
காதலும் கவிழ்கிறது.

நான் உன்னையும், 
நீ என்னையும் 
உண்மையாக தானே நேசித்தோம்- பின்பு 
எப்படி பிரிந்தோம் நாம்.

உன்னை அடைய நான் அடைந்த 
துன்பங்கள் எத்தனை,
உன்னை இழந்த பின் நான் 
அடைந்த வேதனைகள் தான் எத்தனை.

என் காதலின் முடிவு 
கண்ணீரில் தானே முடிந்தது-
உன் காதலின் முடிவு 
கல்யாணத்தில் அல்லவா முடிந்தது.

காதல் தோல்வியால் தற்கொலை செய்யும் 
கோழை இல்லை நான்.
உன்னை மறக்க இன்னொருத்தியை 
தேடிய எதார்த்தவாதி தான் நான்.

உன் நினைவுகளை சுமக்க 
முடியவில்லை என்னால்- அதனால் 
அன்பானவளின் அரவணைப்பை 
தேடினேன் ---கிடைத்தது.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் 
கல்யாணத்தில் தான் 
காதலில் இல்லை..

காதலில் தோற்றவர்களே துயரம் கொள்ளாதீர்கள்...
ஒரு காதலின் தோல்வியில் தான் 
அடுத்த காதல் பிறக்கிறது என்பதை மறவாதீர்கள்.

காதல் செய்வீர்!! வெற்றி கிட்டும் வரை!!

Thursday, 19 April 2012

இதயமில்லாத உன்னிடம்




பெண்ணே.....

உடல் உறுப்புகளை தானம்
செய்ய வேண்டுமாம்...

என் தோழிகள் என்னிடம்
சொன்னார்கள்...

நானும் தானம் செய்தேன்...

என் உறுப்புகள் அனைத்தையும்
ஒன்றை தவிர...

உன் இதயத்தையும் செய் என்றார்கள்...

இதயத்திற்கு சொந்தக்காரி
உன்னிடம் கேட்காமல்...

என்னிடம் கேட்கிறார்கள்...

நான் என்ன செய்ய...

இதயமில்லாத உன்னிடம் இதயத்தை.....