Showing posts with label காதல் தோல்வி. Show all posts
Showing posts with label காதல் தோல்வி. Show all posts

Friday, 20 April 2012

காதல் தோல்வி


உன் குழந்தைக்கு என் பெயரை வைக்க ஆசை படாதே
உன் கணவனும் காத்திருப்பான் இன்னொரு பெண்ணின் பெயரோடு

காதலில் தோற்றவர்கள் ஆண்/பெண் அடுத்து செய்வது என்ன???


1. கவிதை எழுதுவது (ஆண்/பெண்)

2. அவள் நினைவாக தாடி வளர்த்து கொண்டு திரிவது (ஆண்)

3. அடுத்த  காதலை தேடுவது  (ஆண்/பெண்)

4. காதல் பொய் என்று சொல்வது  (ஆண்/பெண்)

5. ஆண்களை வெறுப்பது/பெண்களை வெறுப்பது.

Thursday, 19 April 2012

என் உயிரை பறித்துவிட்ட எண்ணங்களும் நீதான் !


என் வாழ்க்கைக்கு ஒளி தந்த
சூரியனும் நீதான்!

நான் உறங்காமல் தவிப்பதற்க்கு
காரணமும் நீதான்!

யார் பார்த்தும் மயங்காத
பெண்ணவளும் நீதான்!

நான் பார்த்தும் பார்க்காத
சித்திரமும் நீதான்!

என் கண்ணிரண்டில் தெரிகின்ற
முழு நிலவும் நீதான்!

என் கண்களையே திருடிவிட்ட
கள்வியும் நீதான்!

மின்னல்களை சிறைபிடிக்கும்
ஆடவன் என்னை
ஒரு நொடியில் சிறைபிடித்த
மின்மினியும் நீதான்!

என் உயிருக்கு உயிர் கொடுக்கும்
வண்ணங்களும் நீதான்!

என் உயிரையே பரித்துவிட்ட
எண்ணங்களும் நீதான்!

மூன்று முடிச்சு மறுவிநாடி உன்னை




அடி பெண்ணே.....

உன் திருமண அழைபிதழை கொடுத்து
நீ வருவாயா என்கிறாய்...

நிச்சயம் வருவேன்...

உன்னை மணகோலத்தில்
பார்க்க...

காத்திருப்பாயா என்கிறாய்...

காத்திருப்பேன்...

ஆயுள் முழுவதும் அல்ல...

உன் கழுத்தில் மூன்று முடிச்சி
ஏறும் வரை...

மறு வினாடி உன்னை நான்
நினைத்துகூட பார்க்க மாட்டேன்...

என்னை நேசித்த நீ
வேறொருவனை மணக்கலாம்...

வேறொருவன் மணந்தவளை...


எனக்கு ஒரு காதல் கிடைத்ததை
எண்ணி வாழுவேன்.....