பயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்
இரு வாரங்களுக்கு முன் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகளுடன் ட்ரோஜன் வைரஸ் கம்ப்யூட்டர்களைப் பாதிப்பதாக, உறுதியான செய்திகள் கிடைத்தன. Sothink Web Video Downloader என்னும் தொகுப்பின் பதிப்பு 4 மற்றும் Master Filer என்னும் இரு தொகுப்புகளில் இந்த பிரச்னை இருந்ததாக மொஸில்லா குற்றம் சாட்டியிருந்தது. இவற்றுடன் வைரஸ் மறைந்து ஒட்டிக் கொண்டு வந்து தொல்லை கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் தொகுப்புடன் Win32.LdPinch.gen என்ற வைரஸும், இரண்டாவது தொகுப்புடன் Win32.Bifrose.32 என்ற வைரஸும் பரவுவதாகக் கூறப்பட்டது. ஆனால் சென்ற வார இறுதியில் வெளியான தகவல் அறிக்கையில் முதல் ஆட் ஆன் தொகுப்புடன் வைரஸ் இல்லை என்று சொல்லப்பட்டது. இரண்டாவது ஆட் ஆன் தொகுப்பில் மட்டும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவும் இப்போது மொஸில்லாவினால் சரி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த வைரஸ் புரோகிராம் எப்படி ஆட் ஆன் தொகுப்புகளுடன் கலந்தன என்று விளக்கப்படவில்லை. இது மொஸில்லாவுக்கு ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வுதான். ஆட் ஆன் தொகுப்புகள் பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பெருமையைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படி நிகழ்ந்திருப்பது மொஸில்லா இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதனைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment