Showing posts with label 000 சமையல். Show all posts
Showing posts with label 000 சமையல். Show all posts

Saturday, 31 March 2012

பேரீச்சம்பழ அல்வா




   




ரொம்பவே சத்துள்ள அல்வா இந்த பேரீச்சம்பழ அல்வா. சாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும். 

தேவையான பொருள்கள்:

விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ (நீரில் ஊறவைத்துப் பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்)
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/4 கப்
திராட்சை, முந்திரி - தேவையான அளவு
காய்ச்சிய பால் - 4 கப்

செய்முறை:

* அடிப்பிடிக்காத கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, பேரீச்சம்பழ விழுது சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். 

* அடுப்பை நிதானமாக எரிய விடவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கிவிடுங்கள். 

* நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டி அளவான துண்டுகளாக கட் செய்யவும். 

தேங்காய் அல்வா


   






அசத்தலான மணத்துடனும் நல்ல சுவையாகவும் இருக்கும் தேங்காய் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். 

தேவையான பொருள்கள்:

முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
திராட்சை - 6

செய்முறை:

* தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். 

* அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். 

* கலவை கெட்டியாகி இறுகி வரும்போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள். 

* பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.