Showing posts with label சருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள். Show all posts
Showing posts with label சருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள். Show all posts

Monday, 30 January 2012

சருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள்!






நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். 

வெயில் காலத்தில் உடலில் உள்ள தண்ணீர் வியர்வை வழியாக வெளியேறுவதால் சருமம் வறண்டு போகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறண்டு போகும். அதனால் முகத்தில் பளபளப்பு மறைந்து, சருமத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளன.

*    இவர்கள் ஆரஞ்சுப் பழ தோலை காய வைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பால் ஏடு சேர்த்து முகம் முழுவதும் தடவி இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். 

*    வேப்பிலை, புதினா மற்றும் துளசி இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடித்துக் கொள்ளவும். இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து பன்னீருடன் சேர்த் குழைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும். 

*    முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க முட்டையில் மஞ்சள் கருவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். அது நன்கு காய்ந்த பிறகு சருமத்தை பிடித்து இழுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் சுருக்கம் மறைந்து போகும். 

*    எண்ணைச் சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் அதிக எண்ணைப் பசை இருக்கும். இதனால் வெயில் காலத்தில் முகத்தில் பரு மற்றும் கரும் புள்ளிகள் ஏற்படும். வேப்பிலையைக் கொழுந்தாக பறித்து அம்மியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் முல்தானி மெட்டி பவுடரை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் எண்ணைப் பசை குறைந்து, பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். 

*    சிறிது பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து கழுவலாம். 

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. அதற்காக கவனக் குறைவாக இருக்காதீர்கள். 

*    முல்தானி மெட்டியை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து பச்சைத் தண்ணீரில் கழுவ வேண்டும். 

*    எலுமிச்சைச் சாறு, கடலை மாவு, முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து திக் பேஸ்டாக குழைத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவி பதினந்து நிமிடம் கழித்து பச்சைத் தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மிருவாக இருக்கும். 

*    வெயிலில் சென்று வருவதால் சருமத்தில் உள்ள புத்துணர்ச்சி குறையும். அந்த சமயத்தில் ரோஜா இதழ்களை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, அதனை முகத்தில் தடவி கழுவி வந்தால், புதுப்பொலிவு ஏற்படும். 

*    வாரம் ஒரு முறை முல்தானி மெட்டியை பன்னீரிலோ அல்லது தண்ணீரிலோ குழைத்து உடல் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து குளித்து வந்தால் சரும பிரச்னை இருக்காது.